Print this page

மின் கட்டணம் 30% குறைப்பு

December 02, 2024

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதே வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கி வருகின்றனர் என்றார்.

ஜனாதிபதி நாட்டிற்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் 30 வீதத்திற்கும் அதிகமான மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.