Print this page

ஆளும் கட்சி எம்பிக்களுக்கு கவலை தரும் செய்தி

December 03, 2024

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் தீர்மானம் மீளப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஆளும் கட்சி உறுப்பினர்களின் தனியார் வாகனங்களுக்கு எண்ணெய் கோட்டாவை மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்குவது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்பது அந்த முடிவை திரும்பப்பெற வழிவகுத்துள்ளது.

ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த வாகனங்களுக்கு நிகரான உத்தியோகபூர்வ வாகனத்தையும் கோரினர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்கு சட்ட ஏற்பாடுகள் இல்லை என சட்ட திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

எவ்வாறாயினும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது கடமைகளுக்காக உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.