Print this page

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்கள்

December 04, 2024

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (04) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், சானக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிஹரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.