Print this page

தேங்காய் குறித்து மகிழ்ச்சி செய்தி

December 09, 2024

சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இன்று (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தோட்டங்களுக்கு சொந்தமான தேங்காய்கள் லக் சதொச ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.