Print this page

வடக்கு மற்றும் கிழக்கில் நாளை முதல் மழை

December 09, 2024

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (10) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் மறுநாள் இலங்கை-தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரும். 

இதேவேளை, வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.