Print this page

பொது மக்களுக்கான அறிவித்தல்

December 09, 2024

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 1750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

டிசெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 150 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.