Print this page

மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்

December 10, 2024

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் விளம்பரம் செய்த போதிலும், அவ்வாறான கூற்றுக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

கட்டுப்பாடுகளுடன் கூடிய வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்ற அதேவேளை, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.