Print this page

அதானி குழுமத்தின் அறிவிப்பு

December 11, 2024

கொழும்பு மேற்கு முனைய அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்திக்கான நிதியத்திடம் (IDFC) இந்தியாவின் அதானி துறைமுகம் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் தனியார் நிறுவனம் முன்வைத்த 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்திற்கான ஆயத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  சுட்டிக்காட்டியுள்ள அதானி நிறுவனம் 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தயராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.