Print this page

சஜித் கட்சிக்கு நீதிமன்றம் விதித்த தடை

December 12, 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த முறைப்பாட்டினை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.