Print this page

அமைச்சரின் பேராசிரியர் பட்டம் அகற்றம்

December 18, 2024

எதிர்கால கடமைகளில், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் பெயரை கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபயரத்னவாகப் பயன்படுத்துமாறு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (A/கட்டுப்பாட்டு) அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களை   எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அமைச்சர் சந்தன அபயரத்னவின் பெயர் பேராசிரியர் என்ற பட்டத்துடன் முன்னர் பயன்படுத்தப்பட்டது.

அமைச்சின் இணையத்தளத்தில் அமைச்சரின் பெயரும் பேராசிரியர் சந்தன அபயரத்ன என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த உதவிச் செயலர் நேற்று வெளியிட்ட LAD/EST/GA20/MIN/001 என்ற எண்ணைக் கொண்ட கடிதத்தில் அமைச்சரின் பெயர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்னவாக பயன்படுத்த வேண்டும்.