Print this page

ஞானசார தேரருக்கு பிடியாணை

December 19, 2024

இஸ்லாத்தை அவமதித்து மத நல்லிணக்கத்தை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (19) நீதிமன்றில் ஆஜராகாத பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலபதத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்துள்ளார். 

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கொழும்பு குற்றப்பிரிவு இந்த பிடியாணை பிறப்பித்ததுடன், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜூலை 8, 2016 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஞானசார தேரர் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாகவும் சந்தேகநபர் தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான் சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பித்ததுடன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.