Print this page

மஹிந்தவின் பாதுகாப்பை குறைத்தாலும் செலவு குறையபோவதில்லை

December 24, 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் அதிகளவில் காணப்படுவதே அவர்களைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு காரணம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. டொலவத்,  மகிந்த ராஜபக்சவை பாதுகாத்து வந்த இராணுவத்தினரை குறைத்தாலும் செலவு குறையப்போவதில்லை என  கூறுகிறார்.

அந்த இராணுவ வீரர்கள் மீண்டும் இராணுவ முகாம்களுக்குச் சென்றாலும் அவர்களது சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்துகின்றார்.