Print this page

13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக் கூட ஒருபோதும் இருக்கமுடியாது

December 27, 2024

இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன். 

ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடன்படிக்கை பொருத்தமற்றது என்று இந்தியாவே உணருமானால், அது முற்றுமுழுதாக வேறு விடயம். நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவைக் கண்டறிய முடியும். 

ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப் பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும்பத்திரும்ப கூறியிருக்கும்போது 13ஆவது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு நடக்கமுடியும்? அதனால் 13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக் கூட ஒருபோதும் இருக்கமுடியாது.