Print this page

ரணில் மீண்டும் வரத் தயார்

December 31, 2024

அனுபவமற்ற குழுவொன்றிடம் நாட்டை ஒப்படைக்கும் தீர்மானத்தினால் மக்கள் ஏற்கனவே பாரிய அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது இல்லாத தேங்காய் பிரச்சினையை போன்று அரிசி பிரச்சினையையும் தற்போதைய அரசாங்கத்தினால் சமாளிக்க முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அப்போது அரிசி பிரச்சனை இல்லை என்றும் மக்களுக்கு தலா இருபது கிலோ வீதம் டன் கணக்கில் இலவச அரிசி விநியோகம் செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இலங்கைக்கு ஆபத்து வந்தாலும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வரத் தயாராக இருப்பதாக, ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.