Print this page

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது முறைப்பாடு தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்ற போது, இன்றிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் குறித்த குற்றப்பத்திரத்தினை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ, ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.