Print this page

7பேர் பிணையில் விடுதலை

அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து கைதுசெய்யப்பட்டவர்களில் 07 பேர் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மினுவாங்கொடை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, 7 சந்தேக நபர்களை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் செல்வதற்கு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெறாமை காரணமாக அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.