Print this page

பிரபாகரன், விஜெவீரவை கொன்றது சரி!

வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகிறார்.

இந்திய மற்றும் மலேசிய தூதரகங்கள் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், கொலை செய்ய மாட்டோம் என உறுதியளித்து அவர்கள் சரணடைந்ததாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்தக் குழுவினர் பொறுப்பேற்றவுடன் அப்போதைய அரசாங்கத்தினால் கொல்லப்பட்டதாகவும் அதனால் தான் மஹிந்த ராஜபக்ஷ மீது கோபமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பிரபாகரனையும், விஜேவீரனையும் கொன்றதில் தவறில்லை என்றும், அவ்வாறு செய்யாமல் போரை வென்றிருக்க முடியாது என்றும் எஸ்.பி. திஸாநாயக்க வலியுறுத்துகின்றார்.

ஊடகவியலாளர் ஷான் கனேகொடவுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்ட எஸ்.பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.