Print this page

மக்களின் மனப்பான்மை மாற வேண்டும்

சமூக மாற்றத்திற்காக மக்களின் மனப்பான்மை மாற வேண்டும் எனவும், இது 24 மணித்தியாலங்களில் செய்யக்கூடிய செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் ஊடகத்துறைகளில் புதிய பரிணாமத்தை உருவாக்கும் சவாலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு காரணம், தனிநபர் மாற்றத்திற்காக அல்ல, நாட்டின் ஆழமான மாற்றத்திற்காகவே எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.