Print this page

பணிப்புறக்கணிப்பு தோல்வி

இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய சேவைகள் சங்கப் பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க கூறியுள்ளதுடன், இலங்கையிலுள்ள 107 டிப்போக்களில் 32 டிப்போக்களில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளப் பிர​ச்சினையை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய சேவை சங்கப் பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தா முன்னிலையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.