Print this page

ஹீனெட்டியன சங்கா கைது

மினுவாங்கொட களு அஜித் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என்று கூறப்படும் ஹீனெட்டியன சங்கா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜா- எல பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட களு அஜித் என்பவர் கடந்த 09 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்