Print this page

28 கோடி ரூபா பணம் யாருடையது தெரியுமா?

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வசம் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட 28 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம், துபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ரன் மல்லி சம்பாதித்த பணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தங்காலை சிறைச்சாலையில் உயர் பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் முக்கிய உதவியாளர் இந்த நபர் என்று போலீசார் கூறுகின்றனர்.

ஹரக் கட்டா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தென் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களில் ரன் மல்லியும் ஒருவர் என்று போலீசார் கூறுகின்றனர்.

தம்புள்ளை-குருநாகலை சாலையில் உள்ள கிரி பதுல தோரய பகுதியில் ஒரு கேப் பயணித்தபோது 18 கிராம் ஐஸ் போதை பொருள் உடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சாரதி இருக்கைக்கு அடியில் இருந்த ஒரு பையில் இருந்து 23 மில்லியன் ரூபாவையும் 35 ரத்தினக் கற்களையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மீட்டுள்ளது. 

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் விளைவாக, அவர் வசித்த அங்கமுவ வீட்டில் ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 25 கோடி 98 லட்சம் ரூபாய் ரொக்கத்தை போலீசார் மீட்டனர்.