Print this page

24 மாதங்களில் 25 வெளிநாட்டுப் பயணங்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பணியாற்றிய 24 மாதங்களில் 25 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட பயணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும், செலவுகள் போன்றவற்றையும் கணக்கிட வேண்டியிருப்பதால், இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் கால அவகாசம் கோரியுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தொடர்புடைய கேள்வியைக் குறிப்பிட்டிருந்தார்.