Print this page

அங்கொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


அங்கொட, முற்சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞன் பலியாகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.


மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என அந்த காரியாலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.