Print this page

ரணில் - ஜெய்சங்கர் இடையில் சந்திப்பு

February 16, 2025

8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். 

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக தற்போது ஓமானுக்கு செற்றுள்ள விக்ரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பரஸ்பர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.