Print this page

எரிபொருள் விலை மாற்றம் வருமா?

February 17, 2025

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

எரிசக்தி அமைச்சருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறுகிறது.

இதற்கிடையில், இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இடையே சமீபத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த பரந்த கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதானி நிறுவனம் இந்த நாட்டில் செயல்படுத்த முன்மொழிந்த திட்டங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சூழலில் இந்த விவாதங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருவதாக முன்னணி சோசலிசக் கட்சி கூறுகிறது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் உறுப்பினர் துமிந்த நாகமுவ இதனைத் தெரிவித்தார்.