Print this page

அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.