Print this page

24 மணிநேர சேவை

February 21, 2025

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பதிவு செய்யலாம் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.