Print this page

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்க வாய்ப்பு - டிலான்

முஸ்லிம் அமைச்சர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் பதவியேற்றுக்கொள்ளலாம் என சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் டிலான் பெரேரா, இதனைக்கூறினார்.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் வரை முஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு தாமதமடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 “பதவிய விலகிய முஸ்லிம் அமைசர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அமைச்சர்கள் நிலையாக பதவி விலகவில்லை என்பது தற்போது தெளிவாக தெரிகின்றது. இவர்கள் வீட்டில் இருந்துகொண்டு அந்த இயக்கி வருகின்றனர்” என்றார்.

அத்துடன், “அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு வரும் வரை இந்த விடயத்தில் தாமதம் கடைபிடிக்கின்றனர். அந்த பிரேரணையை கடந்த பின்னர் இவர்களை உடனடியாக பழைய அமைச்சு பொறுப்புகளில் அமர்த்தப்படலாம்” என்றும் கூறினார்.