Print this page

சஜித் அணியின் முக்கியஸ்தர் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து இம்தியாஸ் பாகிர் மாக்கார் இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி உள்ளார்.

தான் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தாலும், தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியிலேயே இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.