Print this page

நாமலின் சட்டத்தரணி நிலை குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணி அந்தஸ்தை மோசடியாகப் பெற்றாரா? என விசாரணைகளை நடத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிக்கையிடுமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (03) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணி அந்தஸ்தைப் பெற்றது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு தலைமை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

லஞ்சம் அல்லது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான குடிமக்கள் அதிகாரசபை தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த சிஐடி தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அந்தஸ்தைப் பெறுவதற்காக இலங்கை சட்டக் கல்லூரி தேர்வுக்கு ஆஜரானதில் நாமல் ராஜபக்ஷ மோசடி செய்தாரா என்பது குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் ஆவணங்களை ஆராய்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.