Print this page

தரப்படுத்தல்களை வெளியிடாமலிருக்க தீர்மானம்

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, அகில இலங்கை ரீதியில் தரப்படுத்தல்களை எதிர்காலத்தில் வெளியிடாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கல்கமுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேறு ஒரு முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் என தரப்படுத்தல்களை அறிவிக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.