Print this page

அசாத் சாலியிடம் இரு மணித்தியாலங்கள் வாக்குமூலம்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்ற விசாரணைகள் திணைக்களத்தில் முன்னிலையாகி இரு மணித்தியாலங்கள் வரை நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சி.தொலவத்த கடந்த காலத்தில் பொலிஸ் தலைமையகத்தில் வழங்கியிருந்த முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது வெளியிட்ட கருத்து தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.