Print this page

வரி நிவாரண பட்டியலில் இலங்கைக்கு இடமில்லை

அமெரிக்க ஜனாதிபதி விதித்த புதிய வரிகளிலிருந்து உலகின் மிக வறிய மற்றும் மிகச்சிறிய நாடுகளுக்கு விலக்கு அளிக்கக் கோருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது செய்யப்படாவிட்டால், அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அந்த அமைப்பு சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த அறிக்கை, அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டிய உலகின் 28 ஏழ்மையான மற்றும் சிறிய நாடுகளை அடையாளம் காட்டுகிறது. இருப்பினும், அந்த 28 நாடுகளில் இலங்கை சேர்க்கப்படவில்லை.

அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கும் இருபத்தெட்டு நாடுகளின் அளவு மற்றும் சராசரி ஏற்றுமதி அளவுகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது.