கண்டி அலதெனிய பரிகம பகுதியில் நேற்று (12) இரவு 10 மணியளவில் பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வெசாக் யாத்திரிகர்கள் பயணித்த பஸ் ஒன்றே வீதியை விட்டு தவறி விழுந்த விபத்துக்குள்ளானதில், 29 பேர் காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.