Print this page

ஜனாதிபதி தேர்தலை தாமதிக்க இடமளிக்க மாட்டோம்

பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “இப்போது எங்களுக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு அரமைப்பில் காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தி, பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விட ஜனாதிபதி தயாராகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்றார்.