Print this page

உப்பு தொடர்பில் அமைச்சர் சர்ச்சை கருத்து

நாட்டின் தினசரி உப்பு தேவை ஐநூறு மெட்ரிக் டன் என்று கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்.

அதன்படி, ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஏழு கிராம் உப்பு மட்டுமே உட்கொள்ள முடியும் என்று கூறிய அவர், ஐநூறு மெட்ரிக் டன் உப்பை வழங்க முடியாத நாடு எதுவும் இல்லை என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் பெய்த தொடர் மழையால் உப்பு உற்பத்தி சரிந்ததே இந்த நிலைமைக்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

இதன் விளைவாக உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தேவையான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் வரை அதை இறக்குமதி செய்து சந்தையில் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.