Print this page

'ஆரோக்கியத்துடன் அரசியலில் நுழைய கோட்டா தயார்'


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது, சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வெளியியேறியுள்ளதுடன், ஆரோக்கியமான நிலைக்கு திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்ர் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அவர் தற்போது, வைத்திய சிசிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொண்டுள்ளார். இன்னும் சிறிது காலத்துக்குள் வழமைக்கு திரும்பி, நாட்டின் அரசியலில் பங்கெடுக்கும் எதிர்ப்பார்ப்புடன் வரவுள்ளார்” என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.


சிங்கள பௌத்த மக்கள், தமிழ் இந்து மக்கள், முஸ்லிம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் ஆகிய அனைவரும் ஒன்றுமையுடன், சகோதரத்துவத்துடன், நட்புடன் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்துசெயற்படவேண்டும்.

Last modified on Monday, 09 September 2019 02:24