Print this page

தகாத உறவால் பெண் கொலை

பக்கமுன, யாய 4 பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இருவரும் வேறு நபர்களுடன் திருமணமானவர்கள் எனவும் குறித்த இருவருக்கும் இடையில் தகாத உறவு காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பக்கமுன பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் மற்றும் 35 வயதுடைய ஆண் ஒருவருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

பக்கமுன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.