Print this page

வீடமைப்பு திட்டங்களின் ஊடாக 26 பில்லியன் மோசடி

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் வீடமைப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக 26 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் T.B.சரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் அமைச்சின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.