அரசாங்கப் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்களையும், மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான அனைத்து ஆவணங்களுடன் பதிவுத் தபால் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர் அனுமதிக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் ஜூன் 30 ஆம் திகதிக்கு (திங்கட்கிழமை) முன்னரோ அல்லது அன்றோ பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கும், மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கும், கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமாகிய www.moe.gov.lk இற்குச் செல்லவும். விண்ணப்பப் படிவங்களும், விளம்பரங்களும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கப்பெறும். பெற்றோர்களும், பாதுகாவலர்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் காலக்கெடுவையும், அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.