Print this page

15ஆம் திகதிக்கு முன்னர் முடிவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.