Print this page

ஓமந்தையில் விகாரை அமைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் பொலிஸார் அத்துமீறி நுழைந்து முன்னெடுத்த துப்புரவு செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது.

குறித்த காணியில் விகாரை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து, பாராளுமன்ற உறுப்பினர் இராதநாதன் அர்ச்சுணா இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவரித்தார்.

இதற்குப் பதில் வழங்கிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

“வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருடன் நான் பேசி அதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன். அந்த வேலை இனி இடம்பெறாது” என குறப்பிட்டார்.