Print this page

அஸ்வெசும மேன்முறையீடு நாளையுடன் நிறைவு

 

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் (21) நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக சபை கூறியுள்ளது.

குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Last modified on Sunday, 20 July 2025 03:28