Print this page

புதிய அரசியல் இயக்கம் - சம்பிக்க அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு மக்கள் தீர்ப்பு, பாரம்பரிய குடும்ப அரசியலுக்கு எதிராக பெரும்பான்மையான மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.

அந்த முடிவின் சரி, தவறு இப்போது தெளிவாகிவிட்டது என்றும், ஆனால் பாரம்பரிய, குடும்பக் கட்சிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

எனவே, நாட்டிற்கு படித்த திறமைகளைக் கொண்ட எதிர்கால அரசியல் இயக்கம் தேவை என்றும், அதைக் கட்டியெழுப்பத் தயாராக இருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.

மேலும், அனுர திசாநாயக்கவின் துரோக மற்றும் போலி அரசியலுக்கு எதிரான ஒரு புதிய அரசியல் இயக்கம் இது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.