Print this page

மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்க கூடாது

பாடசாலை மாணவர்களுக்கு வரலாறு கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் கூறுகிறார்.

1600 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நல்ல வரலாறு இல்லை என்று எம்.பி. கூறினார்.

இலங்கை தமிழ் மக்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ சொந்தமானது என்று வரலாறு கற்பிக்கிறது என்றும், இதை மக்களின் தலையில் திணிக்கக்கூடாது என்றும் அர்ஜுன் ராமநாதன் வலியுறுத்துகிறார்.

தேவைப்பட்டால் மட்டுமே படிக்க விருப்பப் பாடங்களாக அந்தப் பாடங்கள் இருந்தால் போதுமானது என்றும் அவர் கூறுகிறார்.

நேற்று (24) சுவர்ணவாஹினி ரத்து இர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.