Print this page

தீர்வை வரி 20% ஆக இருப்பதில் மகிழ்ச்சி - ஹர்ஷ

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரி 20% ஆக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கை சார்பில் இதற்காக முன்னணயிலும், பின்புலத்திலும் பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்த புரிதலுக்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எமது தீர்வை வரி 20% ஆக இருப்பதில் மகிழ்ச்சி. இதன் மூலம் எம்மால் தொடர்ந்து பிராந்திய ரீதியாக போட்டித்தன்மையுடன் இருக்க முடியும்” என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இப்போது சுங்கவரிப் பாதுகாப்புக்கு அப்பால் சென்று பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய சந்தைகளுடன் மிகவும் மும்முரமாக ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.