Print this page

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, சஹஸ்புர வீட்டு வளாகப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.