Print this page

2000 புதிய வாகனங்களை இறக்குமதி செய்யும் அரசாங்கம்

அரச நிறுவனங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் வாகனத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், 2,000 வாகனங்ளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன இது குறித்து தெரிவிக்கையில், சில அரச திணைக்களங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் வழங்கப்படவில்லை. இதனால், களப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

புதிய வாகனங்களை விநியோகிக்கும் போது, ​​பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கலாநிதி அபேரத்ன மேலும் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கை அரச அதிகாரிகளின் செயல்திறனையும் நடமாட்டத்தையும் மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.