Print this page

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பின் தாக்கம்

19 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(20) 3ஆவது  நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தபால் மாஅதிபரிடம் நியூஸ் ஃபெஸ்ட் வினவிய போது தபால் ஊழியர்கள் முன்வைத்த 19 கோரிக்கைளில் 17 கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சில கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தல் ஆகிய இரண்டும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த 2 விடயங்களும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய தபால் பரிமாற்றகத்தின் சில அலுவலகங்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் தவறான நேரத்தில் தவறான வழிமுறையைத் தெரிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.