Print this page

தேசபந்து மீண்டும் கைது

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்வதைத் தவிர்க்கவும், நிபந்தனை பிணையில் விடுவிக்கப்படவும் அவர்  மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Last modified on Wednesday, 20 August 2025 10:55